பஸ்ஸுக்குள் நுழைந்து டிரைவரை வெறிகொண்டு தாக்கிய கார் ஓட்டுநர் கைது

x

கோயம்பேட்டில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய தனியார் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்..

சென்னை கோயம்பேடு முதல் வேலூர் வரை செல்லக்கூடிய அரசு குளிர்சாதன பேருந்தின் ஓட்டுனராக சேகர் (52) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலூரில் இருந்து கோயம்பேடு வரை அரசு குளிர்சாதன பேருந்தை இன்று அதிகாலை இயக்கி வந்துள்ளார். அப்போது கோயம்பேடு சிக்னல் அருகே திரும்பும் போது பேருந்தின் காற்றடைப்பின் கோளாறு ஏற்பட்டு காற்று முழுவதும் வெளியேறியதால் திடீரென சாலையில் பேருந்து நின்று விட்டது. பேருந்தின் பின்னால் வந்த தனியார் சொகுசு வாடகை கார் பேருந்தில் மோதி நின்றது. இதில் காரின் முன் பகுதி சேதாரமடைந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் சாமுவேல் (23) பேருந்து ஓட்டுனரை அவரது இருக்கைக்கு சென்று சரமாரியாக தாக்கினார். இதையடுத்து பேருந்தில் பயணித்த பயணிகள் இருவரையும் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர். கார் ஓட்டுநரின் தாக்குதலால் காயமடைந்த பேருந்து ஓட்டுனர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கார் ஓட்டுநர் சாமுவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன..


Next Story

மேலும் செய்திகள்