நாய்க்கு உணவில் நாட்டு வெடிகுண்டு வைத்து கொன்ற கொடூரம்

x

விழுப்புரத்தில் உணவில் நாட்டு வெடிகுண்டை வைத்து செல்லப்பிராணி ஆக வலம் வந்த நாயை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிஞ்சி நகர் பகுதியில் சுற்றித் திரிந்த நாயை, அந்த பகுதியினர் அன்புடன் வளர்த்து வந்ததாக தெரியவருகிறது. இந்த நிலையில், தங்களை தொந்தரவு செய்ததாக மர்மநபர்கள் சிலர் திட்டமிட்டு உணவில் நாட்டுவெடி குண்டை வைத்துள்ளனர். அதனை நாய் சாப்பிட்டபோது பலத்த சத்தத்துடன் நாயின் தலைபகுதி வெடித்து சிதறி உயிரிழந்தது. இந்த சம்பவத்தில் இதற்கு காரணமான மர்ம நபர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்