Supreme Court | Central Govt | "2 வாரங்களில்.." ஆக்ஷனில் இறங்கிய மத்திய அரசு
Supreme Court | Central Govt | "2 வாரங்களில்.." ஆக்ஷனில் இறங்கிய மத்திய அரசு
#SupremeCourt #CentralGovt #Flight #Aeroplane
விமானக் கட்டணங்களைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகள் இறுதி செய்யப்பட்டு, நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளன, மேலும் அவை இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் விமான நிறுவனங்களின் தன்னிச்சையான மற்றும் முறையற்ற விமானக் கட்டண உயர்வுக்கு எதிராக எஸ். லட்சுமிநாராயணன் தாக்கல் செய்த பொதுநல வழக்கை, நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர். மகாதேவன், அப்பரேஷ் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அவமான கட்டணங்களை முறைப்படுத்தும் விதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை வெளியிடுவதற்கான நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா தெரிவித்தார். சமர்ப்பிப்பை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை நவம்பர் 16-ஆம் தேதிக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டதுடன், அதற்குள் வெளியிடப்பட்ட விதிகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
