Madurai | Kayadu Lohar | மதுரையில் கயாடு லோகர் - சூழ்ந்த ரசிகர்கள்
Madurai | Kayadu Lohar | மதுரையில் கயாடு லோகர் - சூழ்ந்த ரசிகர்கள்
Madurai | Kayadu Lohar | மதுரையில் கயாடு லோகர் - சூழ்ந்த ரசிகர்கள்
மதுரையில் நடிகை கயாடு லோஹரை காண குவிந்த ரசிகர்கள் - தள்ளுமுள்ளு மதுரை பைபாஸ் சாலையில் நடைபெற்ற தனியார் கடை திறப்பு விழாவில், திரைப்பட நடிகை கயாடு லோஹர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குத்துவிளக்கேற்றி கடையை திறந்து வைத்தார். நடிகையின் வருகையை அறிந்த ரசிகர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டனர். நடிகையை பார்த்ததும் ரசிகர்கள் கைதட்டி, கூச்சலிட்டு உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். இதனிடையே ரசிகர்களுக்கும் பாதுகாப்பு பணியாளர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து ரசிகர்களை சந்தித்த கயாடு லோஹர், “மதுரை எனக்கு மிகவும் பிடிக்கும், மதுரை உணவும் மிகவும் பிடிக்கும்” எனக் கூறி, கையசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.