தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி - போலீஸ்க்கு தண்ணி காட்டிய இன்ஸ்டா பிரபலம்

x

குஜராத்தில் கட்டுமான தொழிலதிபரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்ற சமூக வலைதள பிரபலம் கீர்த்தி பட்டேலை போலீசார் கைது செய்தனர். சூரத்தை சேர்ந்த இவரை, இன்ஸ்டாகிராமில் சுமார் 13 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த கட்டுமான தொழிலதிபரிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் கீர்த்தி பட்டேலை காவல்துறையினர் கைது செய்தனர். கீர்த்தி பட்டேல் மீது ஏற்கனவே நில அபகரிப்பு மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் ஆகிய புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒரு வருடத்திற்கும் மேலாக காவல்துறையிடம் பிடிபடாமல் தப்பித்து வந்துள்ளார்.

அகமதாபாத் சர்கேஜ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்தபோது கீர்த்தி பட்டேலை போலீசார் கைது செய்தனர். கீர்த்தி பட்டேல் மீது குஜராத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்