டாஸ்மாக்-ல் தகராறு.. காவலர் என்று கூட பாராமல் கத்திக்குத்து.. பரபரப்பு சம்பவம்! Kanyakumari | Tasmac

x

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே, மதுபோதையில் நிகழ்ந்த மோதலில், காவலர் உள்பட இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. குட்டகுழி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது, பிரேஸ்லி ரெனி - விஜி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் மோதலாக மாறிய நிலையில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில், பிரஸ்லி ரெனி, அவரது நண்பரும் காவலருமான மதியழகன் ஆகியோரை விஜி கத்தியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த இருவரும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்