திருமணம் செய்து வைக்காத ஆத்திரம்.. தூங்கிய அப்பா மீது கல்லை போட்ட வெறிபிடித்த மகன்

x

சிவகங்கையில் திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

அகிலாண்டபுரம் பகுதியை சேர்ந்த மாரி -மாரியம்மாள் தம்பதியின் மகன் அன்புச்செல்வம் மது போதையில் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி மாடியில் உறங்கி கொண்டிருந்த தந்தை மாரியை ஓடுகளால் கொடூரமாக தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மகள் சத்தியா ,உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் மகன் அன்புச்செல்வத்தை சிவகங்கை நகர் காவல்துறை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்