ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா ரயில் நிலையத்தை ரயில் ஒன்று நெருங்கி கொண்டிருந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்த நிலையில் ரயில் நிலைய நடை மேடை வழியாக குடை ஏந்தியபடி முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். ரயில் நிலையத்தை ரயில் அடையும் போது அந்த முதியவர் நடைமேடையிலிருந்து திடீரென தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயல்வது போல் சென்று திடீரென அங்கேயே நின்று கொண்டார். வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதிய நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், ரயில்வே போலீசார் அதை கைப்பற்றியதோடு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆலங்காடு பகுதியில் சேர்ந்த முரளிதரன் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
