Amit Shah | Chhattisgarh Naxalite | சத்தீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக்கொலை - அமித்ஷா பாராட்டு

1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்த தலையை தூக்கிய பாதுகாப்புப் படை

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சல் அமைப்பை சேர்ந்த 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த நக்சல் அமைப்பினரை, 2026ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் நக்சல்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சல் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் என கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com