நகராட்சி ஆணையாளரை ஒருமையில் பேசிய அதிமுகவினர்.. சங்கரன்கோவிலில் தொற்றிய பதற்றம்

x

சங்கரன்கோவில், தென்காசி

நகராட்சி ஆணையரை ஒருமையில் பேசி வாக்குவாதம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி கூட்டத்தில் அதிமுகவினர், நகராட்சி ஆணையாளரை ஒருமையில் பேசி, வாக்கவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நகர்மன்ற தலைவி கவுசல்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு நகர்மன்ற ஆணையர் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறுப்பினர்கள், நகர்மன்ற ஆணையரை ஒருமையில் பேசி, வாக்குவாதம் செய்தனர். பின்னர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து தர்ணாவில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்