மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.08.2025) | 1 PM Headlines | ThanthiTV

x
  • மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேமிக்க, தடுப்பணை கட்ட அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணையை திமுக அரசு தடுத்து விட்டது...திருச்சி மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் உடனான சந்திப்பின் போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்...
  • மதுரை மாவட்டம் பாரபத்தியில், மாநில மாநாடு நடந்த பகுதியில் தவெக தொண்டர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்...கட்சி தலைவர் விஜய்யின் உத்தரவை தொடர்ந்து களமிறங்கினர்....
  • தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...தரமணியில் 5 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தையும் திறந்து வைத்தார்...
  • அரசு முறை பயணமாக முதல்முறையாக இந்தியா வந்துள்ள பிஜி பிரதமர் சிதிவேணி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்...இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்...
  • விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு வாழை இலைகள், வாழை தார்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது...சிவகங்கையில் 450 ரூபாயாக இருந்த வாழை இலைக்கட்டு ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது...ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது...
  • சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை...டெல்லியில் பயண தூரத்திற்கு ஏற்ப 1 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது...
  • சென்னை தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் வழக்கமான அட்டவணையை விட, 10 முதல் 20 நிமிடங்கள் வரை மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன...
  • தமிழகத்தில் வருகிற 30ஆம் தேதி வரை கனமழைக்கான வாய்ப்பு இல்லை...
  • ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை மேலும் தீவிரமடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது...
  • குரூப் 4 தேர்வு தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வர்கள் புகார் கொடுத்துள்ளனர்...
  • சமூக வலைதளங்களில் புண்படுத்தும் பேச்சுகளை தடுக்க வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்...ஸ்டான்ட் அப் காமெடி என்ற பெயரில், மாற்றுத் திறனாளிகளை கேலி செய்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்