மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.08.2025) | 1 PM Headlines | ThanthiTV

x
  • விஜய் எப்போதும் விஜயகாந்த் ஆக மாறிவிட முடியாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்...
  • பீகார் மாநிலம் பர்னியாவில் வாக்காளர் அதிகார யாத்திரையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டார்....
  • ஆகஸ்ட் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது......
  • இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழ்நாடு வந்துள்ளார்.முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணி கட்சி எம்.பிக்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோருகிறார்....
  • சென்னையில் நிச்சயமான பிறகு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், காதலி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.....காதலனை கைது செய்து வேப்பேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்......
  • காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்தது....வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடியிலிருந்து 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.....
  • தென்மேற்கு வங்க‌க் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது...நாளை வடமேற்கு வங்க‌க் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக‌க் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • கடலூரில் சிப்காட் தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் கட்டுமான பணியில் இருந்த 2 பெண்கள் உயிரிழந்தனர்.....
  • சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் சூட்கேஸ் மாற்றி வைக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக பிரமுகர் ஜெயச்சந்திரன் வாக்குவாதம் செய்தார்...
  • செப்டம்பர் 17ம் தேதி கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.....
  • 'பெரியார் விருது' திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி எம்.பிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Next Story

மேலும் செய்திகள்