மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.08.2025) | 1 PM Headlines | ThanthiTV
- தாம்பரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல்...முன் அறிவிப்பு செய்து நாய்களுக்குதடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் வேண்டுகோள்...
- சேலம் மாவட்டம், ஆத்தூரில் வளர்ப்பு நாய் கடித்ததில் இளைஞர் உயிரிழப்பு...ஓராண்டுக்கு முன் வளர்ப்பு நாய் கடித்த நிலையில், உரிய சிகிச்சை பெறாததால் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்த பரிதாபம்...
- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்...பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளி உரிமையாளரின் மகன் போக்சோ வழக்கில் கைது...
- பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்...வீடியோ வெளியிட்ட மாணவிகளின் பெற்றோர் நேரில் ஆஜராக கோவை பேரூர் மகளிர் போலீசார் சம்மன்...
- போதைப் பழக்கம் உள்ள பள்ளி மாணவர்கள் குறித்துகணக்கெடுப்பு நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவு...மதுவிலக்கு துறை கேட்கும் கேள்விகளுக்கு செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் உரிய பதில் அளிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்...
- ஆண்டுதோறும் 50 ராக்கெட்டுகளை ஏவக்கூடிய நிலையை, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா அடைய வேண்டும்...தேசிய விண்வெளி தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு...
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு...ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை...
- மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தான் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும்...தன்னிறைவு பெற்ற மாநிலங்களால் தான் நாடு வலிமையாகும் எனவும், சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு...
- பீகார் மாநிலத்தில் 'வாக்காளர் உரிமை' யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி விவசாயிகளுடன் கலந்துரையாடல்...தண்ணீர், சேறு நிரம்பிய விளைநிலத்தில் இறங்கி, விவசாயிகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி...
- சென்னை கண்ணகி நகரில் பணியின்போது தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்...தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
Next Story
