கணவனின் விபரீத ஆசையால் கதறி துடிக்கும் புதுப்பெண்
பாலிவுட் நடிகையை போல் இருக்க வேண்டும் என கணவரின் வீட்டார் கொடுமைப்படுத்துவதாக உத்தர பிரதேச பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் காஸிப்பூரை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது. நடிகர் நோரா ஃபதேஹியின் தீவிர ரசிகரான கணவர், தன்னை அந்த நடிகை போல் இருக்கவேண்டும் என சாப்பாடு கொடுக்காமல் இருப்பது, கருவை கலைப்பது போன்ற சித்திரவதைகளை செய்து வந்துள்ளார். மனமுடைந்த அந்த பெண் அளித்த புகாரின்பேரில், கணவரின் குடும்பத்தின் மீது வரதட்சணை கொடுமை, கட்டாய கருக்கலைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story
