Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (27.05.2025)| 9 AM Headlines | Thanthi TV
- வங்கக்கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி.....
- தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.....
- கோவை மலைப்பகுதி மற்றும் நீலகிரியில் அதிகனமழை நீடிக்கும்...
- நீலகிரி மாவட்டத்தில் 3வது நாளாக பரவலாக மழை....
- இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு......
- தமிழ்நாட்டில் விரைவில் காலியாகவிருக்கும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19ம் தேதி தேர்தல்...
- மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.....
- டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து...
- தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை நீட்டிப்பு....
- தமிழகத்தில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு .....
- சென்னை திருவான்மியூரில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது...
- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.....
- திண்டிவனம் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் தாய், மகன் படுகாயம்....
- முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு...
- பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகாரில், டெல்லியை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் மோதி ராம் ஜாட் கைது...
- கேரள மாநிலம் இடுக்கி அருகே தொடர் மழையால், கட்டடத்தின் மதில் சுவர் திடீரென சரிந்து விழுந்தது...
- கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை பகுதியில் கனமழை...
- ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட துயரம்.....
- ஜார்க்கண்டில், மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி மணீஷ் யாதவ் சுட்டுக்கொலை...
- விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற வைகாசி மாத ஊஞ்சல் உற்சவம்...
- ரஷ்யாவின் கிரென்ஸ்க் விமான நிலையத்தில், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் விமானம்...
- லக்சம்பர்கில், கடந்த 23ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கியவரை மீட்கச் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...
- பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை, அவரது மனைவி முகத்தில் தாக்கியதால் பரபரப்பு....
- இங்கிலாந்தில், லிவர்பூல் அணியை வரவேற்க கூடியிருந்த ரசிகர்கள் மீது காரை விட்டு ஏற்றிய நபரால் பரபரப்பு...
- ஐபிஎல் தொடரின் 69வது லீக் போட்டியில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, குவாலிஃபயர்-1-ல் விளையாடுவதை உறுதி செய்தது பஞ்சாப்...
Next Story
