காலை 9 மணி தலைப்பு செய்திகள் (20-08-2025) | 9AM Headlines | ThanthiTV

x
  • பா.ஜ.க கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல்...நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை பொது இயக்குனரின் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்...
  • இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிப்பு..என்.டி.ஏ கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...
  • முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம்...மக்களவையில் இன்று அறிமுகம் செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா...
  • 62 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய போர் விமானங்களை வாங்கும் இந்தியா...
  • தனது 50வது திருமண நாளையொட்டி, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்...வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், குடியரசு துணை தலைவர் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை...
  • திண்டுக்கல், கொடைக்கானல், தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை பா.ம.க நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை என விளக்கம்
  • த.வெ.க 2வது மாநில மாநாடு நடைபெறும் திடலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு...த.வெ.க தலைவர் விஜய்யின் தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா இருவரும் இன்று மதுரை வர உள்ளதாக தகவல்... .
  • பாதி கம்யூனிஸ்ட் கட்சியை திமுக விழுங்கிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
  • காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு...
  • தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் வரும் 25ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்....
  • குஜராத்தில் பெய்த கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ள நீர்...குளம் போல் மாறிய சாலைகளில் தத்தளித்து சென்ற வாகனங்கள்...
  • மும்பையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பழுதாகி அந்தரத்தில் நின்ற மோனோ ரயில்...
  • கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது மும்பை...
  • இந்தியா வருகை தந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ பிரதமர் மோடியுடன் சந்திப்பு...
  • இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா ஒப்புதல்...

Next Story

மேலும் செய்திகள்