காலை 9 மணி தலைப்பு செய்திகள் (19-08-2025) | 9AM Headlines | ThanthiTV

x
  • மதுரை மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்...ஊதிய உயர்வு குறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மாநகராட்சி வளாகத்தில் போராட்டம் நடத்திய நிலையில் கைது..
  • பள்ளிப்பாளையத்தில் கல்லீரல் திருடப்பட்டதாக பெண் புகார் அளித்த விவகாரம்...புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி...
  • சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு...தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபைதலைவர் பச்சையப்பன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி...
  • மும்பையில் தொடரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீர்...
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியாக அதிகரிப்பு....
  • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்...தலைமை தேர்தல் ஆணையரின் செய்தியாளர் சந்திப்பு, கேள்விகளுக்கு விடை அளிக்காமல் கூடுதல் கேள்விகளுக்கு வழிவகுத்து இருப்பதாகவும் விமர்சனம்...
  • இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்...தலைமை தேர்தல் ஆணையரின் செயல்பாடுகளில் நம்பகத்தன்மை இல்லை என குற்றச்சாட்டு...
  • இந்தியா வந்தடைந்தார் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ....இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சு....
  • ஜெலன்ஸ்கியை டிரம்ப் சந்திப்பதற்கு முன்பாக பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ரஷ்ய அதிபர் புதின்....அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் அலாஸ்காவில் நடந்த சந்திப்பு குறித்து புதின் தனது மதிப்பீட்டை பகிர்ந்ததாக தகவல்....
  • அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்த சூழலிலும், உக்ரைனில் தாக்குதல் நடத்திய ரஷ்யா...
  • உக்ரைனின் பாதுகாப்பு ஐரோப்பிய நாடுகளின் கையில் உள்ளதாக ஜெலன்ஸ்கி பேச்சு...பாதுகாப்பு உத்தரவாதம் தற்காலிகமானதாக இருக்க கூடாது எனவும் கருத்து...
  • உக்ரைனின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயார் என டிரம்ப் உறுதி...ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட இடங்களின் நிலை குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த டிரம்ப்...
  • போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்..

Next Story

மேலும் செய்திகள்