இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17.12.2025)
- ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது...ஒரு சவரன் தங்கம் மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கி 99 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நான்காவது நாளாக விசாரணைக்கு வந்தது...மதுரை ஆட்சியர், மாநகர காவல் துறை ஆணையாளர் ஆகியோர் ஆஜர் ஆகினர்...தனி நீதிபதியின் உத்தரவால் பொது அமைதி சீர்குலையவில்லை என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது...
- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், தீபம் ஏற்றுகிறீர்களோ இல்லையோ நீதிமன்றத்தை பரபரப்பாகவே வைத்துள்ளீர்கள் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்தார்..தனது உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை என்றும் நீதிபதி கூறினார்..
- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லாதது போல தெரிவதாக இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது...நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஜன.9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..
- திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம்...உயிரிழந்த மாணவனின் தந்தைக்கு அரசு வேலை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையில், 8 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது..
- திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலியான சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...பள்ளியின் தலைமை ஆசிரியர் தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மீது வழக்கு...
- திருத்தணி அருகே அரசு பள்ளியில் சுவர் சரிந்து மாணவன் உயிரிழந்த சம்பவம்...அஜாக்கிரதையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்...
- திருத்தணி அருகே அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு துறைகள் அலட்சியமாக இருந்தது அம்பலம் ஆகியுள்ளது...பள்ளி சுவரை புதுப்பிக்க ரூ. 8 லட்சம் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டது, தந்திடிவிக்கு கிடைத்த பிரத்யேக ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
- 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்...பெயர் மாற்ற விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? எனவும், முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்....
- 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்காக, மூன்றாவது நாளாக விருப்பமனு விநியோகம்...முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்து விருப்ப மணுக்களை பெற்றனர் .
- 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அறிக்கை தயாரிக்க குழு அமைத்தது திமுக...திமுக எம்பி கனிமொழி தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைத்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்...
- அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என, ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது...பாமக விவகாரத்தில் போலி ஆவணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது...
- அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ரேம்ப் வசதியை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..மாற்று திறனாளி வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படாத வகையில் வாக்குச்சாவடிகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது...
- ஈரோட்டில் விஜய் பிரசாரம் செய்யும் இடத்தை, நவீன கருவிகளை பயன்படுத்தி வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர்...கரூர் சம்பவத்தை தொடர்ந்து, நேரில் ஆய்வு செய்ததாக, வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா தெரிவித்துள்ளார்...
Next Story
