இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12-12-2025) | 7PM Headlines | Thanthi TV
- தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...சென்னையில் பனிமூட்டம் நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்து 560 ரூபாய் உயர்ந்துள்ளது...ஒரு சவரன் தங்கம் 98 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
- தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...சென்னையில் பனிமூட்டம் நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..கூடுதலாக சுமார் 20 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது..
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், கூடுதலாக 400 காலிப்பணியிடங்களை சேர்த்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது..ஏற்கனவே 4,000 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு...
- 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது..’மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக 11 ஆயிரத்து 718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது...
- நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்ட விவகாரம்..விமான செயல்பாட்டு ஆய்வாளர்கள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து, விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது..
- டெல்லி காற்று மாசு தொடர்பாக, மக்களவையில் ராகுல் காந்தி கவன ஈர்ப்பு தீர்மானம்...காற்று மாசு காரணமாக லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வயதானவர்கள் மூச்சுவிடவே சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்..
- அவைக்குள் சிகரெட் புகைக்க தான் தடை, நாடாளுமன்ற வளாகத்தில் திறந்த வெளியில் சிகரெட் புகைக்க எந்த தடையும் இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.. இது தொடர்பான குற்றச்சாட்டை கூறும் முன், காற்று மாசுவை குறைக்க கவனம் செலுத்துங்கள் என்றும் பதிலளித்துள்ளார்
- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது விசாரணை...மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது...
- திருப்பரங்குன்றத்தில் 8 அடி கல்தூணில் எப்படி தீபம் ஏற்ற முடியும்? என்று கோயில் நிர்வாகம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது..மலையில் உள்ளது தீபத்தூணா? அல்லது சர்வே தூணா? என முடிவெடுக்க நீதிபதி தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது...
- திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதில் பிரச்சினை இல்லை, ஏற்றும் இடம் தான் பிரச்சினை...மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது..
- இந்துக்கள் மீது தடியடி நடத்தப்படுவதாக, திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி, மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேசினார்..எதிர்க்கட்சி அமைச்சர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக அறிக்கை வெளியிடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்..
- கேரள நடிகை பாலியல் வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை...6 பேருக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதித்து எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது...
- நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, 6 ரூபாய் 15 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது...சென்னையில் ஒரு முட்டை 6 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது...
Next Story
