இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-12-2025) | 7PM Headlines | Thanthi TV
- +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வரும் 19ம் தேதிக்குள் பெற வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது...பிசி - பிசிஎம் பிரிவைச் சார்ந்த மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம், இரண்டரை லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் பட்சத்தில் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது...
- 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வரும் 19ம் தேதிக்குள் பெற வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது...
- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது...வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது...
- தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக 15 துறைகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்...பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது...
- தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி, நாளை தொடங்கி ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது...அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர்...
- SIR குறித்து தொடர்ந்து ஒருதலைபட்சமான பொய்கள் பரப்பப்படுவதாக, மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டினார்...SIR நடவடிக்கையால் சில கட்சிகளின் நலன்கள் பாதிக்கப்படுவதை ஒப்புக்கொள்வதாகவும், அவர்களுக்காக அனுதாபப்படுவதாகவும் தெரிவித்தார்
- வாக்கு திருட்டு குறித்து விவாதம் நடத்த தயாரா? என மக்களவையில் அமித்ஷாவுக்கு ராகுல் சவால் விடுத்தார்...காங்கிரஸ் வெற்றி பெறும்போது தேர்தல் ஆணையம் மீது அவர்கள் பழி போடமாட்டார்கள் என அமித்ஷா பதலடி கொடுத்தார்...
- திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மற்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை மறைமுகமாக குறிப்பிட்டு மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுத்தார் என்பதற்காக பதவி நீக்க தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் கொண்டு வந்துள்ளனர் என்றும், நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
- உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
- மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..குடியரசு தலைவருக்கு இந்தியா கூட்டணி எம்பி-க்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்
- திமுக சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி“ பரப்புரையை, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வாக்குச்சாவடியில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்...டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு வர நினைத்தால், தக்க பாடம் புகட்டப்படும் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்...
- அதிமுக பாஜக கூட்டணிக்கு ஒப்புதல் உட்பட 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன...கூட்டணி குறித்து முடிவெடுக்க ஈபிஎஸ்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது...
Next Story
