மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-06-2025) | 6PM Headlines | Thanthi TV | Today Headlines
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று தென் ஆப்பிரிக்கா வரலாற்று சாதனை...
- 27 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வென்று தென் ஆப்பிரிக்கா அசத்தல்...
- ஐசிசி கோப்பை கனவை நனவாக்கிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமாவை கொண்டாடும் கிரிக்கெட் ரசிகர்கள்..
- அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக, உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட விசாரணை குழு அமைப்பு...
- விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானியின் கடைசி ஆடியோ மெசேஜ்...
- அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் தொடரும் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள்...
- விமான விபத்தில் உயிரிழந்தவர்களில், 39 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாக தகவல்...
- நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு...
- தமிழகத்தில் 1 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் 76 ஆயிரத்து181 மாணவர்கள் தேர்ச்சி...
- நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்...
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை...
- இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பெரிய அளவில் படை திரட்டும் இஸ்ரேல் ராணுவம்...
- வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் பேரணி...
- பாமகவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நாளை ஆலோசனை...
Next Story
