காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் வாடிகனில் காலமானார்..... அவருக்கு வயது 88

நுரையீரல் பாதிப்பில் இருந்து குணமாகி, ஈஸ்டர் திருவிழாவில் பங்கேற்றிருந்த நிலையில் மறுநாளில் மறைந்தார்.....

போப் மரணமடைந்ததைக் குறிக்கும் வகையில் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒலித்த துக்க மணி...


தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்க வாய்ப்பு....

3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....


தினம் தினம் புதிய உச்சம் தொடும் தங்கம் விலையால் ஏழை, நடுத்தர மக்கள் கவலை....

கடந்த 90 நாட்களில் சவரனுக்கு 12 ஆயிரத்து 520 ரூபாய் உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி.....


டெல்லியில், இல்லத்திற்கு வருகை தந்த ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷாவை உற்சாகமாக வரவேற்றார் பிரதமர் மோடி.....

குழந்தைகளுக்கு, மயிலிறகு கொடுத்து கொஞ்சி மகிழ்ந்தார்....


திருச்சி உறையூர் திருவிழாவில் மோர் உள்ளிட்டவை குடித்த மக்களுக்கு உடல்நலம் பாதிப்பு என அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது....

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி....


ஓசூர் அருகே சோதனைச் சாவடியில் காவலரை கொலை செய்ய முயன்ற வழக்கில், 2 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு...

சோதனை சாவடியில் பணியாற்றும் காவலர்களுக்கு, தகுந்த ஆயுதங்கள் வழங்குமாறு டிஜிபிக்கு நீதிபதி பரிந்துரை...


ஐபிஎல் 40ஆவது போட்டியில் இன்று லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதல்...

லக்னோவில் உள்ள மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை...


Next Story

மேலும் செய்திகள்