மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.06.2025)
- இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய ராணுவ அதிகாரிகள், அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு இறுதி ஊர்வலம்...
- தனது காதலியான பத்திரிகையாளர் லாரன் சான்செஸ்-ஐ கரம் பிடித்தார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்...
- மகாராஷ்டிராவில் 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்...
- குமரி மாவட்டம் மேல்புறம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மோதியதில், சாலையோரம் நின்ற பெண் உயிரிழப்பு...
- கன்னியாகுமரி மாவட்டத்தில் வார விடுமுறையையொட்டி, திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்...
- நீலகிரி மாவட்டம் குன்னூரில், வேகத்தடையை கடந்த போது ஆம்புலன்சில் இருந்து கீழே விழுந்த நோயாளி...
- சேலம் மாவட்டம், பூலாம்பட்டியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் மின் கசிவால் தீ விபத்து...
- பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த வழக்கறிஞரை மருத்துவர் தாக்கியதாக குற்றச்சாட்டு....
- ரயில்களில் பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் விவகாரம் குறித்து, திருநங்கைகளுடன் எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆலோசனை...
- குற்றாலம் மெயின் அருவியில், பெண்கள் குளிக்கும் பகுதியில் உடும்பு விழுந்ததால் பரபரப்பு.....
- வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் பைக்கில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் மரணம்...
- ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை கோலாகலம்...
- இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் பெரு வெள்ளத்தை தவிர்க்க ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு கலன்கள்...
- விவசாய நிலங்களில் புதிதாக மரம் நடுவதற்கான புதிய வரைவு விதிகள் வெளியீடு
- தமிழக மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் மூலம் 6 லட்சம் பெண்களுக்கு திறன் பயிற்சி... திட்டத்திற்காக ஆயிரத்து 185 கோடி ரூபாய் நிதி வழங்க உலக வங்கி அனுமதி...
Next Story
