மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.12.2025) | 6 PM Headlines | ThanthiTV

x
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 12 ஆயிரத்து 515 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 160 ரூபாய் அதிகரித்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.....காலையில் கிராமுக்கு 3 ரூபாய் கூடிய நிலையில், மாலையில் 2 ரூபாய் அதிகரித்தது....
  • அரசு முறைப் பயணமாக ஜோர்டான் சென்றுள்ள பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் ஜாபர் அசன், விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்....தொடர்ந்து சிவப்புக் கம்பள வரவேற்புடன் அளிக்கப்பட்ட ராணுவ மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.....
  • ஜோர்டான் தலைநகர் அம்மான் நகரத்தில் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவழியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்....பிரதமருடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.....
  • மகாத்மா காந்தி பெயரில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தின் பணி நாட்களை 125 நாட்களாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது...திட்டத்தின் பெயர் மாற்றம், நிதி பங்களிப்பில் மாற்றம் செய்து புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது....
  • 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்...காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரை நீக்கி, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
  • பாஜகவின் தேசிய செயல் தலைவராக அறிவிக்கபட்ட நிதின் நபின், டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்றுக்கொண்டார்...தலைமை அலுவலகத்திற்கு சென்ற நிதின் நபினுக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கட்சி நிர்வாகளிடன் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • கொல்கத்தா, மும்பையை தொடர்ந்து டெல்லியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி ரசிர்களை சந்தித்தார்.....அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மெஸ்ஸியை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.....

Next Story

மேலும் செய்திகள்