மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.12.2025) | 6 PM Headlines | Thanthi TV
- SIR திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைவதாக இருந்த இநலையில், மேலும் 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது...வரைவு வாக்காளர் பட்டியல் 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது......
- தமிழகத்தில் விநியோகிக்கப்பட்ட 100% SIR படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது...இன்னும் 815 வாக்காளர்களுக்கு மட்டும் படிவங்கள் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
- தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி, இன்று தொடங்கியது...ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறும் இந்த பணியை, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், பெல் நிறுவன பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர்....
- சென்னையில் 10வது நாளாக இண்டிகோ விமான சேவை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது...நீண்ட நேரம் காத்திருந்த மற்றும் சேவை ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பயண வவுச்சர் வழங்குவதாக இண்டிகோ அறிவித்துள்ளது...
- அமெரிக்காவைத் தொடர்ந்து மெக்சிகோவும், இந்தியா மீது 50% இறக்குமதி வரி விதித்துள்ளது.....மெக்சிகோ நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
- தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் பொறுப்பேற்றுள்ளார்...பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பை, அபய்குமார் சிங் கூடுதலாக கவனிக்கிறார்...
- தாராபுரம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பில் ஈடுபட்டார்...46 நாட்களில் 105 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
- தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு, அதிமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான தேதியை ஈபிஎஸ் அறிவித்துள்ளார்...ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வரும் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விருப்ப மனு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்ஸை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்...பொதுக்குழு சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்...
- பாமக விருப்ப மனு வரும் 14ம் தேதி முதல் பனையூர் அலுவலகத்தில் விநியோகிக்கப்படும் என, பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்...சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 20ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
- பனையூரில் நடந்த தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், விஜய் தலைமையை ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு அமைப்பு, கூட்டணி முடிவுகளை எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் உட்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...
- பனையூரில் உள்ள தவெக அலுவலகம் சென்ற பாமக வழக்கறிஞர் பாலு, தவெக பொதுச்செயலாளர் அனந்தை சந்தித்து பேசினார்...வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக வரும் 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு, தவெகவிடம் ஆதரவு கோரினார்...
- கரூர் கூட்ட நெரிசல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது...சிபிஐ-ன் முதற்கட்ட விசாரணை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...
- தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்...அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சதுப்பு நிலங்களை செயற்கை கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் நிறைவடைந்துள்ளது...மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை பெற்ற பின், உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது....
- தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை வெட்டி படுகொலை செய்த சிவசுப்பிரமணியம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்...கடந்த 4ஆம் தேதி, நாமக்கல் பகுதியில் விஷம் அருந்திவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது...
- தங்கத்தை விட்டுச் சென்றது, முன்னாள் வங்கி மேலாளர் பத்மபிரியா என தெரிய வந்துள்ளது....வங்கி லாக்கரில் இருந்து திருடிச் சென்ற நகைகளை, மீண்டும் வைக்க முடியாததால் வங்கியிலேயே விட்டுச் சென்றது தெரியவந்துள்ளது...
Next Story
