Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14.07.2025) | 6 AM Headlines | Thanthi TV

• முரு​கப் பெரு​மானின் அறு​படை வீடு​களில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலம்... • திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, மதுரையில் இருந்து சொக்கநாதருடன் புறப்பட்டு வந்த மீனாட்சி அம்மன்... • டீசல் ரயில் விபத்துக்குள்ளான பகுதியில், ஒரு வழித்தடத்தில் தண்டவாளம் மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டதால் ரயில் சேவைகள் தொடக்கம்.... • திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் தலைமையில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்.. • வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைப்பது இருக்கட்டும், முதலில் ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள்... • திருவள்ளூர் ரயில் தீ விபத்தால் 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் முழுமையாக சேதம்... • சரக்கு ரயிலில் எரிபொருள் தீப்பிடித்து எரிந்ததால் திருவள்ளூரில் மோசமடைந்த காற்றின் தரக் குறியீடு... • கவிஞர் வைரமுத்து எழுதிய "வள்ளுவர் மறை வைரமுத்து உரை" நூலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்... • திமுக ஆட்சியில் போலீஸ் விசாரணையில் மொத்தம் 24 பேர் உயிரிழந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு... • திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நாட்டுப்புற கலைகளுடன் உற்சாக வரவேற்பு... • இங்கிலாந்தின் லண்டன் சவுத்எண்ட் (Southend) விமான நிலையத்தில், சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து... • விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் இத்தாலியை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் சின்னர்... • பிரபல தெலுங்கு நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசராவின் மறைவிற்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல்... • ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் கடிதம்... • சென்னை எம்.சி.ஆர். நகரில், நட்சத்திர ஓட்டலில் கஞ்சா பார்ட்டியில் ஈடுபட்ட புது மாப்பிள்ளை உட்பட 10 பேர் கைது... • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணியிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பித்து ஓடிய நபர்... • சென்னை தி.நகரில், மின்மாற்றி திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு... • அரியலூரில், ஊழியரின் திருமணத்திற்காக சிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளியை, சாரட் வண்டியில் அழைத்து கவுரவித்த கிராம மக்கள்... • சென்னை பெரவள்ளூரில் வணிக வளாகத்தில் உள்ள ஏசியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து.. • பொன்னேரி அருகே சொல் பேச்சை கேட்கவில்லை எனக்கூறி குழந்தைகளுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய்... • திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் குடிநீர் பாட்டிலில் பல்லி கிடந்ததாக புகார்.. • சென்னை அரும்பாக்கத்தில் மாநகரப் பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் விபத்துக்குள்ளான பேருந்து... • சென்னை கொடுங்கையூரில் இரு பிரிவினர்களிடையே பயங்கரமாக மோதல்... • பீகார் மாநில வாக்காளர் பட்டியலில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் மக்கள் உள்ளதால் அதிர்ச்சி...
X

Thanthi TV
www.thanthitv.com