மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (28.06.2025)
தன்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டுவதாக முன்னாள் காதலன் மீது அண்ணா பல்கலைக்கழக மாணவி புகார்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து சவரன் 71,440 ரூபாய்க்கு விற்பனை...
சிறுவனை கடத்திய வழக்கில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு...
அரசுப் பள்ளிகளில் தண்ணீர் குடிப்பதற்கு மாணவர்களுக்கு நேரம் வழங்க வேண்டும்... அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை...
திருச்செந்தூர் கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது...
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது...
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒப்புதல்... திங்கட்கிழமை பதவி ஏற்க உள்ளதாக தகவல்...
டெல்லி, வித்யானந்த் மகராஜின் 100வது பிறந்தநாள் நிகழ்வில் பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம்....
விவசாய பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு மத்திய அரசு வரி விதிக்க உள்ளதாக வெளியான தகவல்...
பாமக நிறுவனர் ராமதாஸ் சொல்லிதான் பாஜக உடன் கூட்டணி வைத்தேன்....
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும்
தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்...
இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
