Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (09-12-2023) | Evening Headlines | Thanthi TV

x

புயல் மழையால் முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்கள், மீன்பிடி உபகரணங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம்...

முழுமையாக சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு ஒரு லட்சம் ரூபாயும், இயந்திர படகுகளுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகவும் மானிய தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு...மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இறவை பாசன பயிர்களுக்கான நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு 17ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்...

பல்லாண்டு பயிர்களுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாயும், மானாவாரி பயிர்களுக்கு 8 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு....

மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகை 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்....

சேதமடைந்த குடிசைகளுக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்ப்டட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம்...

ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்