3-ஆவது டெஸ்ட்- இங்கிலாந்தின் பந்து வீச்சால் தடுமாறும் இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின், 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியும் முதல் இன்னிங்சில் 387 ரன்கள் குவித்தது.
இரண்டாவது இன்னிங்சில், இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்களை எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களுடன் தடுமாறி வருகிறது. இந்தியா வெற்றிபெற 135 ரன்கள் தேவைப்படும் நிலையில், இங்கிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இதனால் 5ஆவது நாள் ஆட்டம், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
