ஏசி வெடித்து துடிதுடித்து பலியான 3 உயிர்கள்.. ஹரியானாவில் அதிர்ச்சி

x

ஏசி வெடித்து பற்றி எரிந்த வீடு - துடிதுடித்து பலியான 3 உயிர்கள்.. ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானாவில் ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை அடுத்த கிரீன் பீல்ட் காலணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில், ஏசியின் கம்ப்ரஸர் வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் கரும்புகை சூழ்ந்ததால், வீட்டில் இருந்த மூவரும் மூச்சு திணறி உயிரிழந்தனர். அவர்களின் மகன் ஆர்யன் வீட்டின் ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பிய நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்