ரூ.2,929 கோடி மோசடி - அனில் அம்பானி மீது வழக்குப்பதிவு.. சிபிஐ வெளியிட்ட அதிரடி தகவல்

x

Anil Ambani | ரூ.2,929 கோடி மோசடி - அனில் அம்பானி மீது வழக்குப்பதிவு.. சிபிஐ வெளியிட்ட அதிரடி தகவல்

தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ குற்ற வழக்குப்பதிவு செய்துள்ளது.ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, அடையாளம் தெரியாத பொதுத்துறை ஊழியர்களுடன் சேர்ந்து ஸ்டேட் வங்கிக்கு இரண்டாயிரத்து 929 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எஸ்.பி.ஐ தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது குற்ற வழக்கை பதிவு செய்ததோடு, சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதியிடம் அனுமதி வாங்கி அனில் அம்பானிக்கு சொந்தமாக மும்பையில் உள்ள இரண்டு இடங்களில் சோதனை நடத்தியதாக சிபிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்