24 ரயில்கள் தாமதம் - மக்கள் அவதி | Chennai | Delhi

x

சென்னை - புதுடெல்லி எக்ஸ்பிரஸ் உட்பட டெல்லிக்கு வர வேண்டிய 24 ரயில்கள், மூடுபனியால் தாமதமாக சென்று கொண்டிருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது. டெல்லியில் அடர்ந்த ​மூடுபனி நிலவுகிறது. இதனால் ரயில்கள் வருகை தாமதமாகியுள்ளது. சென்னை-புதுடெல்லி ஜி.டி. எக்ஸ்பிரஸ், சென்னை-புதுடெல்லி எக்ஸ்பிரஸ் உட்பட 24 ரயில்கள், 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்