இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-02-2025) | 11PM Headlines | ThanthiTV | Today Headlines

x

மும்மொழிக்கொள்கையை எதிர்க்கும் தமிழக அரசு மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவது ஏன்?

அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி.....


கோவை அருகே சிறுமி கூட்டு பாலியல் கொடுமை வழக்கில் கைதானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஈபிஎஸ் வலியுறுத்தல்.....

பெண்கள் பாதுகாப்பை முற்றிலும் துறந்துவிட்ட தமிழக அரசுக்கு கடும் கண்டனம்.....


வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்கிறார்...

சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என சபாநாயகர் அப்பாவு தகவல்...


இரண்டாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 55 வயது ஆசிரியர் கைது...

திருச்சி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்...


மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட கோரிய மனு...

எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய மேலும் ஒரு நாள் அவகாசம் வழங்க கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு...


கர்நாடகாவில் கார்வார் கடற்படை தளம் பற்றிய தகவல்களை கசியவிட்ட சம்பவம்....

அதிகாரிகள் இருவரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை....


Next Story

மேலும் செய்திகள்