Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13.07.2025) | 11 PM Headlines | Thanthi TV
- திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே டீசல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து...
- டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ சுமார் 10 மணி நேரம் போராட்டத்திற்கு பின் முழுவதுமாக அணைப்பு...
- "சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு வேகன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் தீ பற்றி விபத்து"...
- திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்தில், 18 டேங்கர்களில் இருந்த 900 டன் கச்சா எண்ணெய் எரிந்து சேதம் அடைந்ததாக தகவல்...
- திருவள்ளூர் ரயில் தீ விபத்தால் 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் முழுமையாக சேதம்...
- சரக்கு ரயிலில் எரிபொருள் தீப்பிடித்து எரிந்ததால் திருவள்ளூரில் மோசமடைந்த காற்றின் தரக் குறியீடு...
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்த மழை...
- கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மருத்துவர் தின விழாவில் தமிழக சுகாதாரத்துறைக்கு ஆளுநர் ஆர்என் ரவி புகழாரம்...
- வள்ளுவருக்கு பொருந்தாத சாயம் பூசி மறைக்க பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...
- எடப்பாடி பழனிசாமியின் 'மக்களைக் காப்போம்-தமிழகத்தை மீட்போம்' 2ம் கட்ட சுற்றுப்பயணம் ஜூலை 24ஆம் தேதி புதுக்கோட்டையில் தொடக்கம்..
- திமுக ஆட்சியில் போலீஸ் விசாரணையில் மொத்தம் 24 பேர் உயிரிழந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு...
- திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் நாளை தொடங்கிறது சிபிஐ விசாரணை...
- பொன்னேரி அருகே சொல் பேச்சை கேட்கவில்லை எனக்கூறி குழந்தைகளுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய்...
- திருவள்ளூர், புழல் மகளிர் சிறையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண் கைதி, சிறை காவலர் சரஸ்வதி மீது தாக்குதல்...
- திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக வைபவம்...
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து...
- 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து...
Next Story
