காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14.08.2025) | 11 AM Headlines | ThanthiTV
- தமிழகம் முழுவதும் 750 தியேட்டர்களில் வெளியானது ரஜினியின் 'கூலி' திரைப்படம்...தியேட்டம் முன்பு குவிந்த ரஜினி ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டம்...
- தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு...சென்னையில் இருந்து மதுரை, சேலம், நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டண உயர்வு என பயணிகள் குற்றச்சாட்டு...
- கேரள மாநிலம் பாலக்காட்டில் கொட்டும் மழையிலும் 'கூலி' ரிலீஸை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்செண்டை மேளம் முழங்க , பட்டாசு வெடித்தும், பால் அபிஷேகம் செய்தும் உற்சாகம்...
- நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்....நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு...
- சென்னை வடபழனியில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் வழங்கியது மெட்ரோ நிறுவனம்...8.12 கோடி ரூபாய் செலவில் 130 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் நடைமேம்பாலம்...
- தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்...மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குபெண்கள் மீது வன்முறை கட்டவிழ்ப்பு என விமர்சனம்...
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் திடீர் சோதனை...சுதந்திர தினத்தை முன்னிட்டு சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு....
- டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு...
- பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது மோசடி வழக்குப்பதிவு...60 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை...
Next Story
