Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (26.05.2025)| 11 AM Headlines | Thanthi TV
- சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது...
- வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி.....
- நீலகிரி, கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு...
- நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு...
- நெல்லை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை...
- கேரள மாநிலத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்...
- உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு...
- தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...
- தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு...
- சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...
- கேரளா மாநிலம் கொச்சியில் கப்பலோடு கடலில் மூழ்கிய கண்டெய்னர்களில் ஒன்று கொல்லம் பகுதியில் கரை ஒதுங்கியது...
- கப்பல் கவிழ்ந்த விபத்து தொடர்பான மீட்புப்பணிக்காக நெல்லையில் இருந்து கேரளா விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை...
- நீலகிரியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்...
- குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி...
- அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய, மாநில அரசுகள் Z ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்...
- சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் சிக்னலில் உள்ள சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை அடைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவு...
- சென்னை திருவான்மியூரில் உள்ள வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் நூதன முறையில் கொள்ளை முயற்சி...
- சென்னை விமான நிலையத்தில், 326 பயணிகளுடன் தரையிறங்க இருந்த துபாய் விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு...
- சென்னை தேனாம்பேட்டையில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து...
- சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பாலியல் உறவுக்கு வர மறுத்த நபரை அடித்துக் கொன்ற திருநங்கை...
- இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் குவைத் புறப்பட இருந்த விமானம் ரத்து...
- தேனி அருகே தனியார் பருப்பு ஆலையின் மேல்பகுதியில் இருந்து கீழே விழுந்த எலக்ட்ரீசியன் மரணம்...
- ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்...
- பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள பண்ணை வீட்டில், போதை விருந்தில் கலந்து கொண்ட இளம்பெண்கள் உள்பட 31 பேர் கைது...
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 நாட்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் சாமி தரிசனம்...
Next Story
