காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2025) | 11AM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
- நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்...
- ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பைன் காடுகள், தொட்டபெட்டா காட்சி முனை மூடல்...
- கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக சூறைக்காற்றுடன் மழை.....
- வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை...
- நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் 21.5 செ.மீ மழை பதிவு...
- நீலகிரி மாவட்டம் கூடலூரில், சுண்ணாம்பு பாலம் ஆற்றை வாகனத்தில் கடக்க முயன்றபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கேரள சுற்றுலா பயணிகள்...
- கொச்சி அருகே அரபிக் கடலில் விபத்தில் சிக்கிய லைபீரியா நாட்டு சரக்கு கப்பலில் இருந்து ஊழியர்கள் பத்திரமாக மீட்பு...
- ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் காலியாக உள்ள 975 பணியிடங்களை நிரப்புவதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு...
- கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் இணைய வழியில் விண்ணப்பம்...
- தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு காலமானார்...
- நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...
- சிவகாசி அருகே அம்மாபட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...
- புதுச்சேரி தனியார் விடுதியில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் கண்கவர் ஆடைகளில் ஒய்யாரமாக நடந்த கல்லூரி மாணவிகள்...
- இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமனம்...
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 2 தமிழ்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு..
- இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை, பும்ராவுக்கு கொடுக்காதது ஏன்? என தேர்வுக்குழு தலைவர் அகார்கர் விளக்கம்....
- மழை முன்னெச்சரிக்கை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை...
- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சாலை விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்...
Next Story
