காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25.08.2025) | 11 AM Headlines| ThanthiTV
- முன்னாள் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நல பிரச்சினை காரணமாகவே பதவியை ராஜினாமா செய்தார்...எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்...
- குரூப் 4 தேர்வு தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர்...தேர்வு கடினமாக இருந்ததால் பலர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டி உள்ளனர்...
- மதுரை அண்ணா நகரில் மாநகராட்சி குப்பை தொட்டியில் மருத்துவ கழிவுகளை கொட்டிய விவகாரம்...தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது...
- கன்னட திரைத்துறையின் மூத்த துணை நடிகர் தினேஷ் மங்களூரு உடல்நலக்குறைவால் காலமானார்...கேஜிஎப், ரிக்கி, ராணா விக்ரமா உள்ளிட்ட பல்வேறு முக்கிய படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர்...
- ஆன்லைன் சூதாட்ட செயலி தடை சட்டம் எதிரொலியாக, இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகியது ட்ரீம்11 நிறுவனம்...விரைவில் புதிய ஸ்பான்சர்களுக்கான ஒப்பந்தம் கோரப்படும் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது...
- கர்நாடகாவில் வாயில் டெட்டனேட்டர் திணித்து வெடிக்க செய்து கேரள இளம்பெண் கொடூர கொலை...நகை, பணத்திற்காக இளம்பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்...
- மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்...செப்டம்பர் 25ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது...
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது...ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது...
Next Story
