காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (19-08-2025) | 11AM Headlines | Thanthi TV
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு....இந்தியா, சீனா இடையே நிலவும் எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை....
- ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு....அருவியில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதித்தது மாவட்ட நிர்வாகம்...
- மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு....போராட்டத்தை கைவிட வலியுறுத்தி காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு....
- ஜெலன்ஸ்கி உடனான பேச்சுவார்த்தைக்கு பின், ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப்...ஜெலென்ஸ்கி - புதின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவு...
- போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்..
- காக்கும் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம்..
- 3வது நாளாக தொடரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரை...வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை எதிர்த்து விழிப்புணர்வு....
- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நாளை நடைபெறும் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம்கூட்டத்தில் பங்கேற்கதமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி பயணம்...
- டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தனது பயணம் குறித்த அனுபவங்களை பகிர்ந்தார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா...
Next Story
