காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (04.08.2025) | 11 AM Headlines | ThanthiTV
- தூத்துக்குடியில் முதல்முறையாக நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...ரூ.32 ஆயிரம் கோடியில் தொழில் தொடங்க நிறுவனங்கள் ஒப்பந்தம்...
- தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தை திறந்து வைத்து, கார் விற்பனையை தொடங்கிவைத்த முதலமைச்சர் ஸ்டாலின்...
- காஷ்மீரின் குல்காம் பகுதியில் 4வது நாளாக தொடரும் ஆபரேஷன் அகல்...
- ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வர் ஹேமந்த் சோரனின் தந்தையுமான ஷிபு சோரன் காலமானார்...
- முதல்வர் இல்லத்திற்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை...
- தன்னிடம் தங்கச் செயினை பறித்த கொள்ளையனை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்....உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சுதா கடிதம்...
- டெல்லியில் நடைபயிற்சியின் போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதாவிடம் தங்கச் சங்கிலி பறிப்பு...உயர் பாதுகாப்பு மிகுந்த வெளிநாட்டு தூதகரம் அருகே நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு...
- வங்காள மொழியை "வங்கதேச மொழி" என்று டெல்லி காவல்துறை வர்ணித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்...
- தமிழக வாக்காளர் பட்டியலில் பீகாரை சேர்ந்த ஆறரை லட்சம் பேர் சேர்க்கப்படுவதாக காங்கிரஸ் கூறிய புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு...தமிழகத்தில் இதுவரை சிறப்பு தீவிர திருத்தம் தொடங்காத நிலையில், குற்றச்சாட்டு கூறுவது அபத்தமானது என விளக்கம்...
- வெளிமாநிலத்தவர்கள் 6.5 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து...தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடும் செயல் என விமர்சனம்...
- திருப்பத்தூர் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்...மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு...
- ராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது...
Next Story
