மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-08-2025) | 1PM Headlines | Thanthi TV

x
  • பீகாரில் நடைபெறும் வாக்காளர் உரிமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்...
  • ஜம்மு-காஷ்மீரில் தொடர் மழையால் கத்ரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்...
  • அணில் ஜங்கிள் ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும் ஏன் அங்கிள் அங்கிள் என கதறுகிறது என விஜய்யை சீமான் விமர்சனம் செய்துள்ளார்...
  • மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர்களால் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில், விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...
  • இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அறிவித்த 50 சதவீத வரி இன்று அமலுக்கு வந்தது...தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு...
  • விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்...விநாயகர் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தர பிரார்த்திப்பதாக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார் ...
  • விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை களைகட்டியது...பூ உள்ளிட்ட பூஜை பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்...
  • தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...சென்னையில் ஆயிரத்து 519 சிலை வைத்து வழிபட காவல்துறை அனுமதி அளித்துள்ளது...
  • திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது...
  • சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது...
  • நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கணபதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன...

Next Story

மேலும் செய்திகள்