மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13.08.2025) | 1 PM Headlines | ThanthiTV
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி, கண்டன தீர்மானம்...
- சிந்து நதிநீரை நிறுத்த நினைத்தால், இந்தியா மறக்கவே முடியாத அளவுக்கு பாடம் கற்பிப்போம்...ஒரு துளி நீரை கூட அபகரிக்க விட மாட்டோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பகிரங்க மிரட்டல்...
- நியூயார்க்கில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா பொதுச்சபை மாநாட்டில் பங்கேற்கிறார், பிரதமர் நரேந்திர மோடி...அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க உள்ளதாகவும் தகவல்....
- ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
- வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- சாகர் ராணா கொலை வழக்கில், இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து...ஒரு வாரத்திற்குள் சரணடையவும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...
- டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஆஜர்...சட்டவிரோத இணைய வழி சூதாட்ட வழக்கு தொடர்பாக விசாரணை...
- பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்ததாக டி.ஆர்.டி.ஓ. DRDO ஒப்பந்த மேலாளர் கைது...இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த முக்கிய தகவல்களை கசியவிட்டதாக குற்றச்சாட்டு...
- சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் ஏற்பாடுகள் தீவிரம்...ஒத்திகை நிகழ்ச்சியில் மிடுக்குடன் அணிவகுத்து சென்ற முப்படை வீரர்கள்...
- சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னை மாநகரில் 9 ஆயிரத்து 100 போலீசார் பாதுகாப்பு பணி...முக்கிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிப்பு...
- நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை ஒட்டி, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு...துணை ராணுவ படைகள், கமாண்டோக்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக் காவலர் குழுக்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிப்பு...
- சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் அறிவிப்பு...தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என குற்றச்சாட்டு...
- தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு பட்டாசு வெடித்ததில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்த விவகாரம்...உரிய விசாரணை நடத்தி, தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல்...
Next Story
