காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (29-08-2025) | Thanthi TV
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்தது... ஒரு சவரன் தங்கம் 75 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படம் திறக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்... தொழில் முதலீடுகளை ஈர்க்க நாளை முதல் ஜெர்மனி,இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இதனை அறிவித்துள்ளார்...
ரஜினிகாந்த் நடிப்பில் மெகா ஹிட்டான படையப்பா திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்... ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க தயாராக இருப்பதாகவும் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அரசு பேருந்து மோதி பெண் தூய்மை பணியாளர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர்... நாகை நோக்கி சென்ற அரசு பேருந்து, பைக் மீது மோதி வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது...
விழுப்புரத்தில் மகளிர் பள்ளி 6ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது... ஆசிரியர் மீது பெற்றோர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது....
புதுச்சேரியில் போதை பொருள் வழக்கில் டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி, அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது...தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போகும் இடமெல்லாம் விஜய் குறித்தும், கூட்டணி குறித்தும் மட்டுமே தன்னிடம் கேள்வி கேட்கப்படுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்... இனி எந்த இடத்திலும் விஜய் குறித்து பேச மாட்டேன் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்...
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 55 சாலை விபத்துகள் நிகழ்ந்து, 20 பேர் மரணம் அடைகிறார்கள்.... சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிர்ச்சியை தகவலை வெளியிட்டுள்ளது...
தமிழ்நாட்டில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அபூபக்கர் சித்திக்கின் போலீஸ் காவல் நிறைவடைந்தது... சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்...
உத்தரப்பிரதேசத்தில் கங்கையாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், மிர்ஸாபூர் நகரம் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது... மிர்ஸாபூர் பகுதியில் கங்கையாற்றில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் செல்வதால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், மராத்தா சமூகத்தினரின் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடைபெற்றது... சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே Manoj Jarange விடுத்த அழைப்பின் பேரில் ஆசாத் மைதானத்தில் போராட்டக்காரர்கள் அதிக அளவில் திரண்டனர்...
உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காசாவிற்குள்ளும் இஸ்ரேலிய டாங்கிகள் அதிக எண்ணிக்கையில் நுழைந்துள்ளன
