காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

x

கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால், ஒகேனக்கல் பகுதியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று 70 ஆயிரம் கன அடியாக இருந்த ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர் வரத்து இன்று ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் செல்ல கூடாது என்றும், பரிசல் இயக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் நீர் வெளியேறுவதால் கண்காணிப்பு பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்