Madurai | உலகக்கோப்பை ஹாக்கி போட்டி சின்னமாக ஜல்லிக்கட்டு காளை - மகிழ்ச்சி தெரிவிக்கும் மதுரை மக்கள்

x

"ரொம்ப பெருமையா இருக்கு.."உலகக்கோப்பை ஹாக்கி போட்டி சின்னமாக ஜல்லிக்கட்டு காளை - மகிழ்ச்சி தெரிவிக்கும் மதுரை மக்கள்

தமிழகத்தில் நடைபெற உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான சின்னமாக ஜல்லிக்கட்டு காளை தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக பல்வேறு நாடுகளை ஹாக்கி அணிகள் விமானம் மூலம் தமிழகம் வந்துள்ளன. இந்நிலையில், இந்த போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக ஜல்லிக்கட்டு காளையான காங்கேயம் காளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது நமது தமிழர் பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பாக இருக்கும் என காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் தெரிவித்தனர். இதற்காக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்