சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு - வேதனை தெரிவித்த ஜோஹோ நிறுவனர்

x

மோசமான சாலையால் தனது நிறுவனத்தின் இளம் ஊழியர் உயிரிழந்து விட்டதாக, ஜோஹோ கம்பெனியின் நிறுவனரான பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார். சென்னை போரூரை சேர்ந்த மென் பொறியாளரான, 22 வயது இளம்பெண் சோபனா, மதுரவாயல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், தனது நிறுவனத்தின் ஊழியரின் மறைவிற்கு ஜோஹோ செயல் அதிகாரியும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஸ்ரீதர் வேம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மோசமான சாலையால் ஏற்பட்ட விபத்தில் ஜோஹோ மற்றும் அவரது குடும்பத்தினர் சோபனாவை இழந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்