ஜிம்பாப்வே 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

x

50 ஓவர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரில், குரூப் 'ஏ' பிரிவில் ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்க அணிகள் மோதின. ஹராரேவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே, சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்ஸ் அபாரமாக விளையாடி 174 ரன்கள் விளாசினார். அடுத்து பேட் செய்த அமெரிக்க அணி 104 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் ஜிம்பாப்வே 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்