டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றுக்கு கடைசி அணியாக ஜிம்பாப்வே முன்னேறி உள்ளது.

x

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - அதிரடி காட்டிய ஜிம்பாப்வே 'சூப்பர்-12' சுற்றில்..

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றுக்கு கடைசி அணியாக ஜிம்பாப்வே முன்னேறி உள்ளது.

முதல் சுற்றில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் ஜிம்பாப்வேவும், ஸ்காட்லாந்தும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வேவில் தொடக்க வீரரும் கேப்டனுமான கிரைஜ் எர்வின் 58 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய சிக்கந்தர் ராசா, 23 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், 18 புள்ளி 3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து ஜிம்பாப்வே இலக்கை எட்டியது. இந்த வெற்றியால் மேலும் 2 புள்ளிகளைப் பெற்ற ஜிம்பாப்வே, 4 புள்ளிகளுடன் குரூப்-பி பிரிவில் கடைசி அணியாக சூப்பர்-12 சுற்றுக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்த ஸ்காட்லாந்து தொடரில் இருந்து வெளியேறியது.


Next Story

மேலும் செய்திகள்