பெண்களை அவதூறாகப் பேசிய இளைஞர்கள்... இணையத்தில் வைரலாகும் வீடியோ - போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

x

சூளகிரியை அடுத்த மாரண்டப்பள்ளி கிராமத்தில் கடந்த மாதம் நடைபெற்ற எருது விடும் விழாவின்போது, மைக் செட்டுகளை உடைத்ததாக லட்சுமணன் என்பவருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சுமணனும், கிருஷ்ணன் என்பவரும் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், ஊர்மக்களையும், பெண்களையும் அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் அவர்கள் வீடியோ வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஊர் மக்கள், அவதூறாக வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சூளகிரி காவல் நிலையத்தில் குவிந்தனர். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்