விழுப்புரத்தை உலுக்கிய இளைஞர் கொலை - உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் - இதுதான் காரணமா..?

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், இளைஞர் ஒருவர் கொலையான சம்பவத்தில், சிறப்பு உதவி ஆய்வாளரை மாவட்ட எஸ்பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த 30 ஆம் தேதி, ஆரோவில் அருகே பழிக்கு பழியாக விமல்ராஜ் என்பவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில், முன் கூட்டியே தகவல் சேகரிக்காமல், அலட்சியமாக செயல்பட்டதாக கோட்டக்குப்பம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மீது புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து, விழுப்புரம் மாவட்டம் எஸ்பி சசாங் சாய் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com